Monday, June 19, 2006

இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்

1. IIT களிலும், IIM களிலும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் பெரும்பாலோர், முற்பட்ட வகுப்பினரே என்ற நிலைமை, தகுதி (Merit) உடையவர் பலரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றினாலும், தகுதிக்கு, பலமான அடிப்படைக் கல்வி ஒரு முக்கியக்காரணம் இல்லையா ? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களை தகுதியற்றவர் என்று கூற முடியுமா ? தற்போது படிப்பால் உயர்ந்துள்ள பிற்படுத்தப்பட்டவரில் 75 சதவிகிதத்தினர், பெற்றோர் அல்லது நண்பர்கள் வாயிலாக அறிவு பூர்வமான ஆதரவு எதுவும் கிடைக்கப் பெறாதவரே. அதனால், தரமான அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வல்ல சூழலை முதலில் உண்டாக்குவது அவசியமான ஒன்று. இதன் மூலம், பல தரப்பினரும் தகுதி அடிப்படையில் போட்டியிடவல்ல காலம் வரும் வரையில், இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே தோன்றுகிறது.


2. அடுத்து, OBC யில் உள்ள creamy layer தரப்பினரையும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களையும் இடஒதுக்கீட்டில் சமனாகக் கருதும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, இடஒதுக்கீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சுமுகமான சூழல் ஏற்பட பெருமளவு உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


3. IIT மற்றும் IIM களில் படிப்பவர்களுக்கு எதற்கு சாமானியரின் வரிப்பணத்திலிருந்து அரசு, கல்விக் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் ? இக்கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலோர் பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். நுழைவுத் தேர்வுக்கு நிறைய செலவு செய்து பயிற்சி மேற்கொண்டு தேர்வெழுதுபவர்கள் தான் ! எப்படியும் இக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் 90 % சதவிகிதம் பேர் அயல்நாடு சென்று விடுகின்றனர். மேலும், படிப்பு முடிந்தவுடன், அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், தேவையென்றால், படிப்புக்கு கடனுதவி மட்டும் வழங்குவதே சரியானது.

என்றென்றும் அன்புடன்
பாலா

7 மறுமொழிகள்:

ச.சங்கர் said...

நன்று பாலா அவர்களே...

முந்தைய மூன்று கேள்விகள் பதிவில் இட்டிருந்த கருத்திலிருந்து மாற்றம் தெரிகிறது...எனது பின்னூட்டமும் ஒரு காரணமா :))

1.இட ஒதுக்கீடு தேவை என்பதை ஒத்துக் கொண்டது..good...good.

2.அனைவருக்கும் அடிப்படை கல்வி நல்ல தரமுள்ளதாக அமையவேண்டும் என்பதும் சரிதான்..agreed

3.IIT மற்றும் IIM படிக்கும் மாணவர்களுக்கு படிப்புதவித்தொகை அவசியமில்லை என்பதும் பெரும்பாலும் ஏற்புடையதே(இன்றைய சூழலில்)

வாழ்த்துக்கள்

- உடுக்கை முனியாண்டி said...

பாலா,

உங்களோட 2 வது கருத்து தான் ரொம்பவே உதைக்குது

எப்டி பொருளாதார பிரச்சனைக்கு இடஒதுக்கீட்டை தீர்வா வைக்கிறீங்கன்னு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா.

என்னோட கருத்தை ஏற்கனவே போன பதிவுல போட்டிருக்கேன்
http://balaji_ammu.blogspot.com/2006/06/reservation.html#c115066486661184726

அப்புறம் 3வது கருத்துக்கு, இப்போதைக்கு பயனடையறங்க யாரா இருந்தாலும், கீழ் தட்டு மக்களை நினைக்கும் போது கொஞ்ச நாளைக்கு அது தொடரத்தான் வேண்டும். வங்கி, கடன்னு என்ன தான் சொன்னாலும் அதைல்லாம் இன்னும் அவங்களுக்கு அப்பாற்பட்ட விசயமாத்தான் இருக்கு.

enRenRum-anbudan.BALA said...

விசித்திரகுப்தன்,
கருத்துக்களுக்கு நன்றி.

//முந்தைய மூன்று கேள்விகள் பதிவில் இட்டிருந்த கருத்திலிருந்து மாற்றம் தெரிகிறது...எனது பின்னூட்டமும் ஒரு காரணமா :))
//
இல்லையா பின்னே ? நீங்க என்ன சாமானியப்பட்ட ஆளா ? பெரிய லாயர் அல்லவா ;-)

முனியாண்டி,
//அப்புறம் 3வது கருத்துக்கு, இப்போதைக்கு பயனடையறங்க யாரா இருந்தாலும், கீழ் தட்டு மக்களை நினைக்கும் போது கொஞ்ச நாளைக்கு அது
தொடரத்தான் வேண்டும். வங்கி, கடன்னு என்ன தான் சொன்னாலும் அதைல்லாம் இன்னும் அவங்களுக்கு அப்பாற்பட்ட விசயமாத்தான் இருக்கு.
//
இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருக்கலாம் தான். அதாவது, வசதியிருக்கும் மாணவர்களிடமிருந்து, கல்விக்காக ஆகும் முழு செலவை கட்டணமாகப் பெற்று, பின்தங்கியவர்களுக்கு அரசாங்கமே உதவித் தொகை வழங்கலாம்.

//எப்டி பொருளாதார பிரச்சனைக்கு இடஒதுக்கீட்டை தீர்வா வைக்கிறீங்கன்னு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா.
//
இதற்கு ஏற்கனவே என் கருத்தைக் கூறியிருந்தேன் ! அதாவது, "பொருளாதாரம் சரியில்லாததால், ஓரிரண்டு மதிப்பெண்கள் குறைவாக வாங்கிய முற்பட்ட
வகுப்பு மாணவனும் நிராகரிக்கப்படக் கூடாது என்பது என் கருத்து." இந்த விஷயத்தில், நீங்கள் கூறிய "இது தான் வந்து இடஒதுக்கீட்டடீட தேவையவே
கேலி பண்ற இடம்." என்பதை என்னால் ஏற்க இயலாது. we are looking in different directions. அதனால், விட்டு விடலாம்.
நன்றி.

என்றென்றும் அன்புடன்,
பாலா

jeevagv said...

வெறும் பிறப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது சமூக அநீதி. அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று.

enRenRum-anbudan.BALA said...

ஜீவா,
கருத்துக்கு நன்றி !

குழலி / Kuzhali said...

பாலா நான் இட்ட பின்னூட்டத்தின் சுட்டி இதோ, இன்னமும் இந்த பதிவில் வெளிவரவில்லை கொஞ்சம் பாருங்கள்....

//Creamy layer தொடந்து இடஒதுக்கீட்டை அனுபவிப்பதும் இதற்கு ஒரு காரணம்.
//
இதற்கு என் எதிர்ப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என நினைக்கின்றேன்

enRenRum-anbudan.BALA said...

குழலி,
நீங்கள் பின்னூட்டமிட்ட பதிவு http://balaji_ammu.blogspot.com/2006/06/reservation.html
அதற்கான என் பதிலும் அங்கே உள்ளது.
நீங்கள் "உரத்த சிந்தனை" (http://balaji_ammu.blogspot.com/2006/06/blog-post_19.html)பதிவில் இடவில்லை! பின் அங்கு தேடினால் எப்படி இருக்கும் ????
நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails